ஸ்ரீதிவ்யாவுக்கு எதிராக சதி செய்யும் நடிகைகள்!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவுக்கு எதிராக சதி செய்யும் நடிகைகள்!

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து தனக்கென ஒரு இடத்தை கைப்பற்றியிருப்பவர் ஸ்ரீதிவ்யா. நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் களத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்க ஸ்ரீதிவ்யாவோ, ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து பல புதிய படங்களையும் கைப்பற்றி வருகிறார்.

அதோடு, அதர்வாவுடன் நடித்திருக்கும் ஈட்டி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருப்பவர் அந்த படத்தில் மட்டுமே பாடல் காட்சிகளில் ஓரளவு கிளாமர் காட்டி நடித்துள்ளார்.

மற்றபடி தொடர்ந்து அப்படி நடிக்க டைரக்டர்கள் வலியுறுத்தியபோது மறுத்து விட்டார். ஆனபோதும் அவருக்கு எந்த தேக்கநிலையும் ஏற்படவில்லை. கைவசம் அரை டஜன் படங்களை வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில், அவரது வளர்ச்சியை சகித்துக்கொள்ளமுடியாத சில இளவட்ட நடிகைகள் ஸ்ரீதிவ்யாவைப்பற்றி தவறான தகவல்களை பரப்பி விட்டு வருகின்றனர். அதாவது, அவர் பார்ப்பதற்குத்தான் சின்ன பெண் மாதிரியே இருப்பார். ஆனால் அவருக்கு இப்போது 28 வயதாகி விட்டது. அந்த வகையில், இவரும் ஒரு முத்தின நடிகைதான்.

ஆனால் அவரது உயரம்தான் தற்போது அவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக இருந்து அவரை காப்பாற்றி வருகிறது என்று தங்களுடன் நடிக்கும் ஹீரோக்களிடம் ஸ்ரீதிவ்யாவின் வயது பற்றி கூறி தவறான இமேஜை உருவாக்கி விட்டு வருகின்றனர்.

அதோடு நில்லாமல், அவருக்கு தமிழ் ஹீரோக்களை விட தெலுங்கு ஹீரோக்களுடன் டூயட் பாடுவதில்தான் அலாதி பிரியம். அதனால் அங்கு ஓரளவு படங்கள் கிடைத்து விட்டால் பின்னர் தமிழ் நடிகர்களை திரும்பிகூட பார்க்க மாட்டார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

ஆனால் இந்த சேதி காத்துவாக்கில் ஸ்ரீதிவ்யாவின் காதுக்கு சென்றடைந்தபோது. அவர் எந்தவித டென்சனையும் காட்டவில்லையாம். மாறாக, காய்க்கிற மரம் கல்லடி படத்தானே செய்யும் என்று கேசுவலாக எடுத்துக்கொண்டாராம். 

 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions