ஸ்ரீதிவ்யாவின் கூச்ச சுபாவம்!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவின் கூச்ச சுபாவம்!

தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும் சில படங்களில் நடித்துவிட்டு தான் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

ஆனால், அங்கு சரியான ஹிட் கிடைக்காததால் இடம்பெயர்ந்து தமிழுக்கு வந்த ஸ்ரீதிவ்யாவுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொடுத்துள்ளது.

அதனால் ஐதராபாத் நடிகையான அவர் கோடம்பாக்கத்து நடிகையாக இங்கேயே முகாமிட்டு நடித்து வருகிறார். அதோடு, ஹன்சிகா, நந்திதா போன்ற நடிகைகளை மாதிரி தோழிகளை சந்திக்க வேண்டும் என்று இவர் அடிக்கடி சொந்த ஊருக்கு செல்வதில்லை.

மாறாக, சென்னையில் உள்ள தனது தோழிகளை மட்டுமே அவ்வப்போது சென்று சந்தித்து ரிலாக்ஸ் செய்து வருகிறார். அப்படி தோழிகளின் இல்லங்களுக்கு ஸ்ரீதிவ்யா செல்லும்போது, ஒரு நடிகை மாதிரி செல்லாமல் நார்மலான பெண்களைப்போன்றே உடையணிந்து விசிட் அடிக்கிறாராம்.

அதோடு, சினிமாக்களில் ஹீரோக்களை கலாய்க்கும் ஸ்ரீதிவ்யா, நிஜத்தில் ரொம்ப அமைதியான பெண்ணாக, கூச்ச சுபாவத்துடன்தான் அனைவரிடமும் பேசுகிறாராம். அதைப்பார்த்து, படத்துக்குப்படம் ஹீரோக்களை காய்ச்சி எடுக்கும் அந்த நடிகையா இவர்? என்று அவரது தோழிகளின் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் மூக்கில் விரலை வைக்கிறார்கள்.


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions