ஸ்ரீதிவ்யாவுக்கு அதிர்ச்சி!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவுக்கு அதிர்ச்சி!

தற்போது தமிழில் வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஸ்ரீதிவ்யா குறிப்பிடத்தக்கவர். ஆந்திர நடிகையான இவருக்கு அங்கும் ஓரளவு மார்க்கெட் இருப்பதால், அவர் நடிக்கும் படங்களை தெலுங்கிலும் வெளியிடலாம் என்று கணக்குப் போட்டே அவரை ஒப்பந்தம் செய்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

அதனால் அதை பயன்படுத்தி படத்துக்குப்படம் தனது படக்கூலியை அதிரடியாக உயர்த்திக்கொண்டே வரும் ஸ்ரீதிவ்யாவுக்கு, இப்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கியிருக்கிறது.

அதனால், இப்போது கதையை கேட்பதற்கு முன்பே ஹீரோ யார் என்பதுதான் அவரது முதல் கேள்வியாக உள்ளது. அந்த வகையில், பெங்களூர் டேஸ் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கயிருந்த சமந்தா விலகியபோது, அடுத்த சாய்சாக ஸ்ரீதிவ்யாவைதான் அணுகினர்.

இதனால் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கப்போகிறோம் என்று அந்த படத்தில் ஓடோடிச்சென்று ஒப்பந்தமானார் ஸ்ரீதிவ்யா. ஆனால் இப்போது அவருக்கு அதிர்ச்சிதரும் வகையில், அந்த படத்தில் சித்தார்த்தும் இல்லை என்று கூறிவிட்டார்களாம்.

அதோடு, வளர்ந்து வரும் ஹீரோ ஒருவர்தான் சித்தார்த் வேடத்தில் நடிப்பார்கள் என்று அவர்கள் கூறியதை அடுத்து, சித்தார்த்துடன் டூயட் பாட வேண்டும் என்ற எனது ஆசை இப்படி கடைசி நேரத்தில் கைநழுவிப் போய் விட்டதே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீதிவ்யா.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions