கிளாமர், முத்தக்காட்சி முடியவே முடியாது - ஸ்ரீதிவ்யா

Bookmark and Share

கிளாமர், முத்தக்காட்சி முடியவே முடியாது - ஸ்ரீதிவ்யா

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் அறிமுக நாயகி ஸ்ரீதிவ்யாவிற்கு அதன் பின் வெளிவந்த 'ஜீவா' படம் மிகச் சுமாரான வெற்றியையும், 'காக்கி சட்டை' நல்ல வெற்றியையும் பெற்றுத் தந்தது.

தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக 'பென்சில்' படத்திலும், அதர்வா ஜோடியாக 'ஈட்டி' படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடித்த 'வராதி' படம் கடந்த வாரம் வெளியானது.

தமிழில் ரேவதி, சினேகா போல கிளாமர் அல்லாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இந்தக் காலத்தில் கிளாமராக, மாடர்ன் உடைகளில் மும்பை நட்சத்திரங்களோடு பல நடிகைகள் போட்டி போடும் சூழ்நிலையில் கிளாமராக நடிக்காமலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் ஸ்ரீதிவ்யா.

சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் எப்போதுமே கிளாமராகவோ, முத்தக் காட்சியிலோ நடிக்கவே மாட்டேன். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்.

இப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் தான் என்னால் எளிதாக நடிக்க முடியும். முத்தக் காட்சி, கிளாமர் நடிப்பு ஆகியவற்றிற்கு எதிரானவள் நான். என்னைத் தேடி வரும் எல்லா வாய்ப்புகளிலும் நான் நடிக்க மாட்டேன்.

முதலில் ஒரு கதாபாத்திரம் என்னைக் கவர வேண்டும். நான் சிறப்பாக நடிக்க அந்தக் கதாபாத்திரம் எனக்கு ஒரு சவாலைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும்,” எனக் கூறியிருக்கிறார்.

மேலும், திரைப்படங்களில் கௌதமி நடித்த கதாபாத்திரங்களைப் போல நடிக்க ஆசை என்றும் சொல்லியிருக்கிறார். எல்லாரும் ரேவதி, சுகாசினி, ராதா ஆகியோரை முன்மாதிரியாகச் சொல்வார்கள், அதிலும் ஸ்ரீதிவ்யா வித்தியாசமாக கௌதமியை சொல்லி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions