50 லட்சம் கேட்கும் ஸ்ரீதிவ்யா

Bookmark and Share

50 லட்சம் கேட்கும் ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன், ஜீவா, விக்ரம்பிரபு, ஜி.வி.பிரகாஷ் போன்ற நடிகர்களுடன் டூயட் பாடியுள்ள ஸ்ரீதிவ்யாவுக்கு அடுத்தபடியாக மேல் தட்டு ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக உள்ளது.

அதனால், வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு யாராவது கால்சீட் கேட்டால், கால்சீட் ப்ராப்ளம் என்ற காரணத்தை முன்வைத்து நாசூக்காக தவிர்த்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம், தற்போது தமிழ் தெலுங்கில் தயாராகும் பெங்களூர் டேஸ் மலையாள படத்தின் ரீமேக்கான சிங்கப்பூர் டேஸ் படத்தில் அவர் ஆர்யாவுக்கு ஜோடியாகியிருக்கிறார்.

அதனால் அடுத்தபடியாக, சில மெகா ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் முயற்சிகளில் படுதீவிரமாக இறங்கியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி நடிகையாக வேண்டும் என்று நினைக்கும் அவர், சிறிய ஹீரோக்களின் படமாக இருந்தால் பெரிய டைரக்டர் அந்த படத்தை இயக்க வேண்டும்.

அதேசமயம், பெரிய ஹீரோவின் படமாக இருந்தால் புதுமுக டைரக்டராக இருந்தாலும் ஓகே என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மேலும், தனது சம்பளத்தையும் 50 லட்சம் என்று கறாராகவும் கேட்டு வருகிறார் ஸ்ரீதிவ்யா.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions