சம்பளத்தை உயர்த்தும் ஸ்ரீதிவ்யா...

Bookmark and Share

சம்பளத்தை உயர்த்தும் ஸ்ரீதிவ்யா...

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானாவர் ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.

அவற்றைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்தவர் முதல் படத்தின் வெற்றிக்குப் பின் 'ஜீவா, வெள்ளைக்காரதுரை' ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். இதில் 'வெள்ளைக்கார துரை' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள 'காக்கி சட்டை' படம் இன்று வெளியாகிறது. இந்தப் படத்திற்குப் பின் ஸ்ரீதிவ்யா சம்பளத்தை உயர்த்தப் போவதாக கோலிவுட்டில் செய்திகள் அடிபடுகிறது. தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாருடன் 'பென்சில்' படத்திலும், அதர்வாவுடன் 'ஈட்டி' படத்திலும் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறதாம். 'காக்கி சட்டை' படத்திற்க்குப் பிறகே அந்தப் படங்களை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளாராம், சம்பளத்தை உயர்த்துவதற்காகவே கொஞ்சம் நாட்களைக் கடத்துகிறார் என்று சொல்கிறார்கள்.

சுட்டித்தனமான நடிப்பில், சினேகா, நயன்தாரா ஆகியோர் வரிசையில் ஸ்ரீதிவ்யா இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவே பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் முன் வருகிறார்களாம்.

ஸ்ரீதிவ்யாவின் சம்பளத்தை நிர்ணயிக்கப் போகும் படமாக 'காக்கி சட்டை' அமையப் போகிறது என்றுதான் கோலிவுட்டில் இருக்கும் பல பேச்சுகளில் ஒன்றாக இருக்கிறது.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions