ஸ்ரீதிவ்யாவுக்கு பிடித்தமான ஹீரோ!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவுக்கு பிடித்தமான ஹீரோ!

காட்டுமல்லி படத்துக்காக தமிழுக்கு அழைத்து வரப்பட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மெகா ஹிட்டாக அமைந்ததால் ராசியான நடிகை ஆனார்.

அதோடு, நயன்தாரா, காஜல்அகர்வால், தமன்னா, சமந்தா ஆகியோர் பட்ஜெட்டை மீறிய நடிகைகளாக இருந்ததால் சில பட்ஜெட் படங்களில் வேகவேகமாக கமிட்டானார் ஸ்ரீதிவ்யா. அதோடு, மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடிய சிவகார்த்திகேயன், தனது காக்கி சட்டை படத்துக்கு மீண்டும் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்யச்சொன்னார்.

அதனால், முந்தைய படத்தைவிட இந்த படத்தில் இருவரும் அதிக நெருக்கம் காட்டி நடித்தனர். நல்ல ஜோடி என்றும் பெயரெடுத்தனர். இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரேசுடன் நடித்துள்ள நிலையில், அவரது புதிய படத்தில் எப்படியேனும் தான் கமிட்டாகி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார் ஸ்ரீதிவ்யா.

அதோடு, மீடியாவினர், தற்போதைய ஹீரோக்களில் உங்களுக்கு பொருத்தமான ஹீரோ யார்? என்று அவரைக்கேட்டால், மற்ற ஹீரோக்கள் கோபித்துக்கொள்வார்களே என்கிற பயம் சிறிதும் இன்றி, சிவகார்த்திகேயன்தான் எனக்கு பொருத்தமான ஹீரோ. அதோடு பிடித்தமான ஹீரோவும்கூட என்றும் வெள்ளந்தியாக பதிலளிக்கிறார் அம்மணி.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions