ஸ்ரீதிவ்யாவிடம் பள்ளிக்கூட கதைகளை பகிர்ந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ்!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவிடம் பள்ளிக்கூட கதைகளை பகிர்ந்து கொண்ட ஜி.வி.பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த முதல் படம் பென்சில். ஆனால் அதற்கடுத்து அவர் நடித்த டார்லிங் திரைக்கு வந்து விட்டது. அதோடு அந்த படம் ஓரளவு வெற்றியும் பெற்றது.

அதனால் பென்சில் படம் இன்னும் பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கையில் மூன்றாவது படமான த்ரிஷா இல்லேன்னா நயன்தாராவில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும், பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யா இருவருமே பள்ளி மாணவர்களாக நடித்துள்ளனர்.

அப்படி அவர்கள் நடித்து வந்தபோது, மற்றவர்களுக்கான காட்சிகளை படமாக்கும்போது அவ்வப்போது அவர்கள் இருவரும் மரத்தடிகளில் அமர்ந்து அடுத்து நடிக்கப்போகும் காட்சிகளில் எந்த மாதிரி நடிக்கலாம் என்பதை இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வருவார்களாம்.

அப்போது, டைரக்டர் சொல்லும் காட்சிகளைப்போன்று தனது பள்ளிக்கூட காலத்தில் நடிந்த ஏதாவது சம்பவங்கள் இருந்தால் அந்த பழைய கதைகளை ஸ்ரீதிவ்யாவிடம் சுவாரஸ்யமாக சொல்வாராம் ஜி.வி.பிரகாஷ். அதைக்கேட்கும் ஸ்ரீதிவ்யாவும், பின்னர் தனது பள்ளிக்கூட காலத்து கதைகளை வண்டிவண்டியாக கொட்டுவாராம்.

இப்படி பகிர்ந்து கொண்ட அவர்கள், சில காட்சிகளில் நடிக்கும்போது தங்களது நிஜ வாழ்க்கையில் நடந்தது போன்று திருத்தம் செய்யுமாறும் டைரக்டரிடம் கேட்டுக்கொள்ள, அதற்கு உடன்பட்டு சில காட்சிகளில் அவர்கள் ஆசைப்பட்ட மாதிரியே மாற்றம் செய்து படமாக்கினாராம். இதனால் பள்ளி காலத்துக்கு மனதை பின்னோக்கி கொண்டு சென்று நிஜ மாணவ மாணவிகளாக அவர்கள் இருவருமே மாறி நடித்தார்களாம்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions