ஸ்ரீதிவ்யா பாணியில் கயல் ஆனந்தி!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யா பாணியில் கயல் ஆனந்தி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, தான் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போது வரை தனது படங்கள் சம்பந்தப்பட்ட எந்த விசயமாக இருந்தாலும் தனது அம்மாவின் ஆலோசனைப்படி தான் நடந்து வருகிறார்.

கதை கேட்பது, கால்சீட் கொடுப்பது என எதுவாக இருந்தாலும் அவருக்கு எல்லாமே அம்மாதான். அதேபோல்தான் இப்போது கயல் ஆனந்தியும், அம்மா பிள்ளையாக இருக்கிறார்.

குறிப்பாக, படப்பிடிப்பு தளங்களில் எப்போதுமே அம்மாவின் நிழலிலேயே இருக்கும் ஆனந்தியிடம் பட விசயமாக தயாரிப்பாளர் தரப்பு ஏதாவது பேச வேண்டும் என்றால், எதுவாக இருந்தாலும் என் அம்மாவிடமே பேசிக்கொள்ளுங்கள் என்று திருப்பி விடுகிறார்.

அதோடு, முக்கியத்துவம் வாய்ந்த க்ளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க டைரக்டர்கள் முன்கூட்டியே ரிகர்சல் பார்க்க சொன்னாலும், அதுபற்றி கயல் முன்னிலையில் அவர் அம்மா தான் விவரமாக கேட்கிறார்.

அதையடுத்து, வீட்டிற்கு சென்றதும் பள்ளி ஆசிரியை போன்று மகளுக்கு அவரே பயிற்சி கொடுத்து விட்டு அடுத்த நாள் ஸ்பாட்டுக்கு கூட்டி வருகிறார். அப்படி வந்த பிறகு தான் கேமரா முன்பு நடிக்கும்போது, ஒவ்வொரு காட்சியை நடித்து முடித்ததும் ஓகேவா என்று அம்மாவின் முகத்தைதான் பார்க்கிறாராம் கயல் ஆனந்தி.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions