சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா

Bookmark and Share

சூர்யா-தனுசுடன் நடிக்க ஆசை: ஸ்ரீதிவ்யா

தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் நடித்து வருகிறார்.தனது சினிமா அனுபவம் பற்றி கூறிய ஸ்ரீதிவ்யா...“சினிமாவில் ஒரு படம் ஓடினால் பரபரப்பாக பேசுவார்கள். 2 படம் ஓடவில்லை என்றால் மார்க்கெட் அவுட் என்பார்கள்.

எனவே, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது. சமீபத்தில் ஜீவாவுடன் நான் நடித்து வெளியான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘ஈட்டி’ படத்துக்கு பிறகு அதர்வாவுடன் நான் நடித்துள்ள ‘ஒத்தைக்கு ஒத்த’ படமும் வெற்றி படமாக அமையும் என்று நம்புகிறேன்.

மீண்டும் பட வாய்ப்புகள் என்னை தேடி வரும்.தமிழ் சினிமாவில் பல முன்ணணி நாயகர்களுடன் நடித்துவிட்டேன். தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சூர்யா, தனுஷ் எனக்கு பிடித்தமான ஹீரோக்கள். எனவே, அவர்களுடன் நடிக்க அதிக ஆர்வமாக இருக்கிறேன்.

நான் சினிமாவில் காலடி வைத்த போது இத்தனை படங்களில் நடிப்பேன். இவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. என் வாழ்க்கை யில் நான் நினைக்காதது எல்லாமே நடக்கிறது” என்றார்.


Post your comment





Related News
நடிகை ஸ்ரீதிவ்யா இளையதளபதியின் ரசிகையா?
விக்ரம் கலகலப்பாக பழகும் நல்ல மனிதர்: ஸ்ரீபிரியங்கா
மெகா பட்ஜெட்டில் உருவாகும் மெகா நடிகர்கள் இணையும் படம்- பாகுபலி பட்ஜெட்டை தாண்டுமா?
ரசிகர்கள் சொன்ன வாழ்த்து- ஆனால் செய்தியை மறுத்த நடிகை ஸ்ரீதிவ்யா
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
ஸ்ரீதேவிக்கு தன் மகளால் இப்படி ஒரு சோதனையா? அழும் நிலைக்கு வந்தாரா!
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions