ஸ்ரீதிவ்யாவை நடிக்க அழைத்த டிவி சீரியல் நிறுவனம்!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவை நடிக்க அழைத்த டிவி சீரியல் நிறுவனம்!

தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் நடித்து வருபவர் ஸ்ரீதிவ்யா. தெலுங்கு நடிகையான இவர் தமிழில் தற்போது ஒரு இடத்தை பிடித்து விட்டார். ஆனால், தெலுங்கில் அவருக்கான இடம் இப்போது இல்லை.

ஆனபோதும் தாய்மொழியில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா.

இந்த நேரத்தில், தெலுங்கில் பிரமாண்ட டி.வித் தொடர்களை தயாரிக்கும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஸ்ரீதிவ்யாவை அணுகி, தங்களது மெகா தொடரில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து தருமாறு கேட்டுக்கொண்டார்களாம்.

ஆனால் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தன்னிடம் அவர்கள் அப்படி கேட்டதால், பதில் சொல்ல முடியாமல் தடுமாறி விட்டாராம் ஸ்ரீதிவ்யா. ஆனால், அந்த டி.வி சீரியல் கம்பெனியில், சினிமாவில் முன்னணி ஹீரோயினி ஆவதற்கு முன்பு 5 ஆண்டுகளாக பல சீரியல்களில் நடித்தவராம் ஸ்ரீதிவ்யா.

அந்த நட்பு அடிப்படையில்தான் அவரிடம் கேட்டார்களாம். ஆனபோதும், இப்போது அப்படி நடித்தால் தனது சினிமா மார்க்கெட் பாதிக்கும் என்று மறுத்து விட்ட ஸ்ரீதிவ்யா, இப்போது முடியாது இன்னும் ஒரு 5 வருடங்கள் கழித்து இதற்கான பதிலை சொல்கிறேன் என்று கூறி விட்டாராம்.


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions