50 பேய்களுடன் சண்டை போடும் ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி

Bookmark and Share

50 பேய்களுடன் சண்டை போடும் ஸ்ரீகாந்த் - ராய்லட்சுமி

ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் பேய் படம் ‘சவுகார்பேட்டை’. இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். வடிவுக்கரசி, விவேக், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா, பவர் ஸ்டார் சீனிவாசன், நான்கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சென்னைக்கு அருகே உள்ள மூலக்கொத்தலம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி இருவரும் 50 பேய்களுடன் அதிரடியாக மோதும் பயங்கர சண்டைக்காட்சியை படமாக்கி வருகின்றனர். எட்டுக் கேமிராக்களை கொண்டு பத்து நாட்களாக இந்த சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படமாக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ஜான் பீட்டசர் இசையமைத்து வருகிறார். சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions