காத்திருக்கும் ஸ்ரீகாந்த்!

Bookmark and Share

காத்திருக்கும் ஸ்ரீகாந்த்!

பாகன் படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடித்த படம் எதிரி எண்-3. அந்த படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து, விட்ட தனது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கிய ஸ்ரீகாந்த், நம்பியார் என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார்.

அதோடு, சந்தானத்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அவரை ஒப்பந்தம் செய்தபோது அவரது மார்க்கெட் கெட்டியாக இருந்ததால், சந்தானம் படத்தில் இருக்கிற தைரியத்தில் ஐந்து கோடிக்கு மேல் செலவு செய்து அந்த படத்தை தயாரித்தார் ஸ்ரீகாந்த்.

ஆனால், அவர் படத்தை முடித்த நேரம் சந்தானத்தின் மார்க்கெட் சரிந்து விட்டது. அதனால், இப்போது ஸ்ரீகாந்த் செலவு செய்த பணத்தை கொடுத்து படத்தை வாங்ககூட ஆளில்லையாம்.

அதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், அவர் நடித்த இன்னொரு படமான ஓம் சாந்தி ஓம் படமும் யு சான்றிதழ் பெற்று ரிலீசுக்கு தயாரானது.

அந்த நேரத்தில் அரண்மனை, பிசாசு, டார்லிங் என வரிசையாக பேய் படங்கள் வந்ததால், தாமதமாக ரிலீஸ் செய்யலாம் என்று தள்ளி வைத்தனர். ஆனால் இப்போது வரிவிலக்கில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு, படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆக, ஓம் சாந்தி ஓம் வெளிவந்து ஓரளவு ஒடினால்தான் நம்பியாரை விற்பனை செய்ய முடியும் என்று அந்த படத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions