சாக்லேட் பாய் இமேஜ் வேண்டாம்: ஸ்ரீகாந்த்

Bookmark and Share

சாக்லேட் பாய் இமேஜ் வேண்டாம்: ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் தற்போது சவுகார்பேட்டை என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இதில் முதன் முறையாக அகோரியாவும், யூத்தான இளைஞராகவும் இரண்டு கெட்அப்பில் நடிக்கிறார்.

இதுபற்றி ஸ்ரீகாந்த் கூறியதாவது:

நான் நடிக்க வந்த காலத்திலிருந்து மென்மையான கேரக்டர்களே எனக்கு கிடைத்தது. சாக்லெட் பாய் இமேஜ் ஏற்பட்டதால் என்னை தேடி வந்தவர்களும் அதுபோன்ற கேரக்டர்களோடுதான் வந்தார்கள்.

அந்த இமேஜை மாற்ற நானே சொந்தமாக ஆக்ஷன் படம் எடுத்து நடித்தேன். அப்படி இருந்தும் அது மாறவில்லை. அதனால் இனி சாக்லெட் பாய் இமேஜ் தரும் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவு செய்து நம்பியார் படத்தில் இதுவரை யாரும் செய்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்தேன்.

அடுத்து சவுகார் பேட்டை பேய் படம். நீங்கள் பேயாக அகோரியாக நடிக்கிறீர்கள் என்றார்கள். கதையே கேட்காமல் ஒப்புக் கொண்டேன். படத்துக்கான போட்டோஷூட் நடத்தி பார்த்தபோது என்னை பார்த்து நானே வியந்தேன்.

அந்த அளவுக்கு அந்த கேரக்டர் எனக்கு கச்சிதமாக இருந்தது. நம்பியாரும், சவுகார் பேட்டையும் என்னை சாக்லெட் பாய் இமேஜிலிருந்து வெளிக்கொண்டு வந்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் ஸ்ரீகாந்த்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions