பேய் படம் பார்க்கும் ஸ்ரீகாந்த்!

Bookmark and Share

பேய் படம் பார்க்கும் ஸ்ரீகாந்த்!

நண்பன், பாகன் படங்களுக்குப்பிறகு எதிரி எண்-3, நம்பியார், ஓம் சாந்தி ஓம் ஆகிய படங்களில் நடித்தார் ஸ்ரீகாந்த். ஆனால் அந்த படங்கள் இன்னமும் திரைக்கு வரவில்லை. இதில் எதிரி எண்-3 படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிக்கிடக்கிறது.

இந்த நிலையில், தற்போது சவுகார் பேட்டை, சாமியாட்டம் படங்கள் மூலம் தனது ரூட்டை மாற்றியிருக்கும் ஸ்ரீகாந்த், இனிமேல் இதுபோன்ற ஹாரர் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறாராம்.

அதனால், இதுவரை நான் டீசன்டான ஹீரோ என்று அழுக்குப்படிந்த கதைகளை தவிர்த்து வந்த அவர், இப்போது அந்த மாதிரியான கதைகளில் நடிக்க எஸ் சொல்லி வருவதோடு, சுந்தர்.சி போன்ற காமெடி கலந்த பேய் படங்களை இயக்கும் டைரக்டர்களை தொடர்பு கொண்டு தன்னை வைத்து படம் இயக்குமாறும் கேட்டுக்கொண்டு வருகிறார்.

அதோடு, சமீபகாலமாக தனது மார்க்கெட் மந்தமான நிலையில் இருப்பதால், தற்போது கமிட்டாகியிருக்கும் கம்பெனிகளில் சம்பள விசயத்தில் ரொம்பவே அடக்கி வாசித்து வரும் ஸ்ரீகாந்த், சமீபகாலமாக தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் வெளியான பேய் படங்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் போட்டு பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.

 


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions