ஸ்ரீகாந்தின் ஓம் சாந்தி ஓம் தாமதம் ஏன்?

Bookmark and Share

ஸ்ரீகாந்தின் ஓம் சாந்தி ஓம் தாமதம் ஏன்?

பாகன் படத்திற்கு பிறகு ஸ்ரீகாந்த் நடித்து வந்த எதிரி எண்-3, நம்பியார், ஓம் சாந்தி ஓம் என மூன்று படங்களுமே வெளிவராமல் கிடப்பில் கிடக்கின்றன. இதில் எதிரி எண்-3 படம் பாதியிலேயே ட்ராப்பாகி விட்டது. ஆனால், ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் மற்ற இரண்டு படங்களும் தடுமாறிக்கொண்டு கிடக்கின்றன.

காரணம், நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்துக்கு இணையான வேடத்தில் சந்தானமும் நடித்தார். விளைவு தனது வியாபார வட்டத்தை கருத்தில் கொள்ளாமல் சந்தானம் படத்தில் இருப்பதால் 5 கோடிக்குமேல் செலவு செய்து அந்த படத்தை தயாரித்தார் ஸ்ரீகாந்த்.

ஆனால், அவ்வளவு தொகையை கொடுத்து படத்தை வாங்க ஆளில்லாததால் இப்போது வரை அப்படம் கிடப்பில் கிடக்கிறது. ஓம் சாந்தி ஓம் படத்தை எடுத்துக்கொண்டால், ரிலீசுக்கு தயார் நிலையில்தான் உள்ளது.

ஆனபோதும், அந்த படமும் சூர்யா நடிப்பில் வெளியான மாஸ் படமும் ஒரே ஆங்கில படத்தின் தழுவலாம். இந்த நிலையில், சூர்யாவின் மாஸ் படத்திற்கு முன்பே வெளியாக வேண்டிய ஓம் சாந்தி ஓம் எதிர்பார்த்தபடி வியாபாரம் ஆகாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

அந்த கேப்பில் மாஸ் படம் வெளியாகி விட்டது. அதன்பிறகுதான் ஓம் சாந்தி ஓம் படத்தின் கதைதான் மாஸ் என்பது தெரிய வந்தது. அதனால், இப்போது அந்த படமும் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் சிலபல மாற்றங்களை செய்து சில மாதங்கள் கழித்து அப்படத்தை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions