நண்பனில் விஜய்-ஜீவாவுடன் போட்டிபோட்டு நடித்தேன்: நடிகர் ஸ்ரீகாந்த்

Bookmark and Share

நண்பனில் விஜய்-ஜீவாவுடன் போட்டிபோட்டு நடித்தேன்: நடிகர் ஸ்ரீகாந்த்

ஈரோடு அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசும்போது ''எனது முதல் படம் 'ரோஜா கூட்டம்'. நடிகை பூமிகாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தேன். 'நண்பன்' படம் எனக்கு பிடித்த படங்களில் ஒன்று ஆகும்.

விஜய், ஜீவா மற்றும் எனக்கும் சம அளவில் பாத்திரங்கள் இருந்தது. இதனால் 3 பேரும் போட்டி போட்டு நடித்தோம். இதனால் 'நண்பன்' படம் வெற்றி படமாக அமைந்தது. எனக்கு எல்லா நடிகர்-நடிகைகளையும் பிடிக்கும். யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. 

படிக்கும் போதே எனக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் வீட்டில் ஒழுங்காக படி என்று அட்வைஸ் செய்தார்கள். இதனால் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அதன் பிறகு எம்.சி படித்தேன். பிறகு மனதில் பட்டதை செய்ய வேண்டும் அல்லவா? அதனால் சினிமா வாய்ப்பு வந்ததை பயன்படுத்திக் கொண்டேன். இதனால் நடிக்க வந்துவிட்டேன்.

கல்லூரி காலம் பொற்காலம். சாதி-மதத்துக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக பழகும் வாய்ப்பு இந்த காலத்தில்தான் உண்டு. அறிவையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பவர்கள் கல்லூரி பேராசிரியர்கள்.

உங்களை வழி நடத்துபவர்கள் அவர்கள்தான். ஆகவே ஆசிரியர்களை மதித்து நடக்க வேண்டும்'' என்ற ஸ்ரீகாந்த் மாணவ, மாணவிகளுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்தார். 


Post your comment





Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions