கோலிவுட் டைரக்டர்களுக்கு தூது விடும் ஸ்ரீமுகி!

Bookmark and Share

கோலிவுட் டைரக்டர்களுக்கு தூது விடும் ஸ்ரீமுகி!

ஸ்ரீதிவ்யாவைப் போன்று தெலுங்கில் 3 படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு தமிழுக்கு வந்தவர் ஸ்ரீமுகி. ராட்டினம் படத்தை இயக்கிய கே.எஸ்.தங்கசாமியின் எட்டுத்திக்கும் மதயானை படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்தார்.

ஆனால், அந்த படம் வெற்றி பெறாததால் அதையடுத்து ஸ்ரீமுகியை கோடம்பாக்கத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், சில கம்பெனிகளுக்கு நம்பிக்கையுடன் ஏறி இறங்கினார் ஸ்ரீமுகி.

அதோடு, எட்டுத்திக்கும் மதயானையில் ஹோம்லியாக நடித்தபோதும், கிளாமர் கதைகளில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக கூறிவந்தார். ஆனபோதும், தோல்வி சென்டிமென்ட் காரணமாக அவருக்கு யாரும் வாய்ப்பு தர முன்வரவில்லை. அதனால் மீண்டும் தெலுங்குக்கே சென்று விட்ட ஸ்ரீமுகி, தற்போது சந்திரிகா 2015 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கும் பேசிக்கொண்டிருக்கிறாராம். இருப்பினும் தமிழிலும் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு அளவுக்கதிகமாக உள்ளதாம். அதனால், தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டே அஞ்சலி, ஸ்ரீதிவ்யா போன்று நானும் தமிழ்ப்படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று மீண்டும் கோடம்பாக்க டைரக்டர்களுக்கு தூது விட்டு வருகிறார் ஸ்ரீமுகி.

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions