ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்

Bookmark and Share

ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.

ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறிய அவர். தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார்.

அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிபடுத்துகிறார்கள்.

இந்த படத்துக்கு தடைவிதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions