பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி

Bookmark and Share

பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி

தெலுங்கு பட உலகில் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக போராட்டங்கள் நடத்திய ஸ்ரீரெட்டி சென்னைக்கு வந்து இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மீது மீண்டும் புகார் சொல்ல தொடங்கி இருக்கிறார். அவர் பேட்டி வருமாறு:-

சென்னை வந்தது ஏன்?

சில நாட்களுக்கு சென்னையில்தான் இருக்கப் போகிறேன். இங்குள்ள திரையுலகினரால் நான் சந்தித்த கசப்பான அனுபவங்களை மனம் திறந்து பேச இருக்கிறேன்.

கேள்வி:- சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சுதான் உள்ளே வந்தீங்களா?”

பதில்:- எல்லோருக்கும் தெரியுமே. எல்லோரும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையேனு நான் அதைப் பத்தி அவ்வளவா யோசிக்கலை. மீடியா துறை ரொம்ப ஸ்டிரிக்ட். யாரும் யாரையும் இந்த வி‌ஷயத்துக்காகக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா, சினிமாவுல அப்படி இல்லை. நேரடியாவே இந்த வி‌ஷயத்துக்காக அப்ரோச் பண்ணுவாங்க.”

கேள்வி:- உங்களுக்கு இந்த பிரச்சினை முதல் முதலா எப்போது நடந்தது? அப்போது, எப்படி எதிர் கொண்டீங்க?”

பதில்:- ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக கிராமத்துக்குப் போயிருந்தோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, நைட் டைம்ல அந்த டைரக்டர் என் ரூம் கதவைத் தட்டினார். அவர், என்னை அடையத்தான் முயற்சி பண்றார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். `இதைப் பத்தி முடிவெடுக்க எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்‘னு சொல்லிட்டேன்.

பிறகு, நல்லா நடிக்கலைனு எல்லோர் முன்னாடியும் திட்டுறது, ஒன் மோர், ரீடேக் எடுத்து டார்ச்சர் பண்றது என்று வேறவிதமா நடந்து கிட்டார். அந்த ரெண்டு நாளும் எனக்கு நரகமா இருந்தது. எனக்குக் கெட்ட பெயர் வந்திடுச்சுனா, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, நடிகை ஆக முடியாதுனு நானும் அதுக்கு `சரி’னு சொல்லிட்டேன்.

கேள்வி:- இதை பற்றி பேச வேண்டும் என்று ஏன் முடிவு எடுத்தீர்கள்?

பதில்:- இதில் நான் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் இதை பற்றி பேசி இருக்க மாட்டேன். ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக தான் குரல் கொடுக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.

கேள்வி:- முன்னணி நடிகைகளை இழுத்தது ஏன்?

பதில்:- எல்லா நடிகைகளுமே தொடக்கத்தில் இந்த கசப்பான அனுபவங்களை கடந்தே வருகிறார்கள். பிரபல நடிகை ஆகிவிட்டால் இந்த தொல்லை இருக்காது. அதன் பிறகு அவர்கள் விரும்புபவர்களுடன் மட்டும் செல்லலாம். உங்கள் தேதி அவர்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் எதுவும் தரவேண்டியதில்லை. உங்களுக்கு வாய்ப்பு தேவைப்பட்டால் கொடுக்க வேண்டி இருக்கும். நீங்கள் தராவிட்டால் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் கூட தர மாட்டார்கள்.

மோசமான ஆடைகளை கொடுத்து உடுத்த சொல்வார்கள். சில ஹீரோக்கள் ஹீரோயின்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தங்கள் மனைவியை நடிக்க அனுமதிப்பதில்லை. காரணம் இதுதான். முடியாது என்று சொல்லி இருந்தால் வீட்டிலேயே இருந்து இருக்க வேண்டியது தான். நடிகை ஆகி இருக்கவே முடியாது. நான் விரும்பி பகிரவில்லை.

கேள்வி:- அரை நிர்வாண போராட்டம் நடத்தியது ஏன்?

பதில்:- நிறைய பேர் என்னை நிர்வாணமாக பார்த்து இருக்கிறார்கள். அதனால் தான் அந்த போராட்டத்தை கையில் எடுத்தேன். ஒரு இந்திய பெண்ணாக நிர்வாணமாக நிற்க கூச்சப்பட்டேன். தேவைப்பட்டால் அப்படியும் போராட்டம் நடத்த தயார்.

பதில்:- வாய்ப்புக்காகவோ பரபரப்புக்காகவோ இதை வெளிக்கொண்டு வரவில்லை. இந்த பரபரப்பு என்பது சில நாட்கள் தான். இன்னொரு பரபரப்பு வந்தால் இது மறக்கடிக்கப்படும். எனக்கு அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காது. இந்த வி‌ஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்பினேன்.

கேள்வி:- உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா?

பதில்:- இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளியிடுவேன். நான் தனியாக வசித்து வருவதால் என் மொபைலில் எதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

கேள்வி:- உங்களை தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் இல்லையா?

பதில்:- நான் மற்றவர்களுக்காக பிறக்கவில்லை. எனக்காக வாழ்பவள். எனவே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment

Related News
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions