இன்று ரிலீசாகும் ஸ்ரீசாய் திரைப்படம்: சாய்ராம் கோவிலில் படக்குழுவினர் சிறப்பு பூஜை

Bookmark and Share

இன்று ரிலீசாகும் ஸ்ரீசாய் திரைப்படம்: சாய்ராம் கோவிலில் படக்குழுவினர் சிறப்பு பூஜை

ஸ்ரீசாய் ஜுவல்ஸ் உரிமையாளர் டி.ஏ.செந்தில் தயாரிப்பில், சாய்பாபா பற்றிய ‘ஸ்ரீசாய்’ பக்தி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சாய்பிரகாஷ் இயக்கியுள்ளார். பலராம் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சாய்பாபாவாக இயக்குனர் சாய்பிரகாஷ் நடித்துள்ளார். கதை எழுதி படத்தை தயாரித்துள்ள டி.ஏ.செந்தில் சாய்பாபா பக்தராகவும், மூத்த நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஸ்ரீசந்துரு வசனம் எழுதியுள்ளார். படத்தில் சங்கர் மகாதேவன், ராஜேஷ் கிருஷ்ணா, பத்ரி பிரசாத், அனுராதா பட் உள்பட பிரபல பாடகர்கள் பக்தி பரவசமூட்டும் பாடல்களை பாடியுள்ளனர்.

‘ஸ்ரீசாய்’ பக்தி திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, நேற்று பெங்களூரு பத்மநாபநகர் சாய்ராம் கோவிலில் உள்ள சாய்பாபாவுக்கு படத்தின் தயாரிப்பாளர் டி.ஏ.செந்தில் தலைமையில் படக்குழுவினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். 

‘ஸ்ரீசாய்’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் டி.ஏ.செந்தில் கூறுகையில், ‘சாய்பாபாவின் வரலாற்றை கூறும் வகையில் ‘ஸ்ரீசாய்’ திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. நெஞ்சை உருக்கும் பக்தி பாடல்கள் படத்தில் உள்ளது. குடும்பத்துடன் பொதுமக்கள் பார்க்க வேண்டிய படம்’ என்றார். இயக்குனர் சாய்பிரகாஷ் கூறுகையில், ‘‘ஸ்ரீசாய்’ திரைப்படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 

சாய்பாபாவின் ஆசீர்வாதத்தால் அவருடைய வாழ்க்கை குறித்த படத்தை நான் இயக்கி உள்ளேன். அனைத்து தரப்பு மக்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும்’ என்றார். இந்த சிறப்பு பூஜையில் தயாரிப்பாளர் டி.ஏ.செந்தில், இயக்குனர் சாய்பிரகாஷ், இசைஅமைப்பாளர் பலராம், சாமிஜி சத்குரு சதீஷ் சத்யசீலன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions