விஸ்வரூபம் எடுக்கிறது ஸ்ரீவித்யாவின் சொத்துப் பிரச்சினை

Bookmark and Share

விஸ்வரூபம் எடுக்கிறது ஸ்ரீவித்யாவின் சொத்துப் பிரச்சினை

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீவித்யா பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் இறந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீவித்யா உயிரோடு இருந்த காலத்தில் உறவினர்களோடு அவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. எனவே தனது சொத்துக்களை பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பை நடிகரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவித்யாவின் நண்பருமான கணேஷ் குமாரிடம் ஒப்படைந்திருந்தார்.

ஸ்ரீவித்யாவின் இறப்புக்கு பின்னரும் அந்த சொத்துக்கள் கணேஷ்குமாரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர்ராமன் கணேஷ்குமாரிடம் இருக்கும் சொத்துக்களை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.

இந்த புகாரை விசாரித்த உள்துறை அமைச்சர் சென்னிதாலா இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ராஜ்பாலமீனா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது.


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions