ஸ்ரீதேவியின் அடுத்த சம்பள சாதனை...

Bookmark and Share

ஸ்ரீதேவியின் அடுத்த சம்பள சாதனை...

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதில் முன்னணியில் இருந்து வருபவர் சரண்யா மட்டுமே. ஏறக்குறைய அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவா நடித்து விட்டார், நடித்தும் வருகிறார்.

இவருக்கு அடுத்து துளசி, சீதா, ஆகியோரைச் சொல்லலாம். இவர்களுக்கெல்லாம் சம்பளமாக சில லட்சங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால், 'புலி' படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கே ஸ்ரீதேவி 5 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் என்ற தகவல் அந்தப் படத்தில் நடிக்கும் நாயகிகளுக்கே ஆச்சரியத்தை அளிப்பதாக இருந்திருக்கும்.

இதுவரை இந்தத் தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் அடுத்து தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு 2 கோடி ரூபாய் வரை ஸ்ரீதேவிக்கு சம்பளம் தர சம்மதித்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தெலுங்கின் முன்னணி ஹீரோவான பிரபாஸ் அடுத்து நாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தில் அவருடைய  அம்மா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார்கள்.

அவர் அதற்கு சம்பளமாக 2 கோடி ரூபாய் கேட்டாராம். அதற்கு தயாரிப்பாளர்களும் சம்மதித்து விட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். ஆக, தென்னிந்தியத் திரையுலகில் நாயகிகளை விட அதிக சம்பளம் வாங்குவதில் ஸ்ரீதேவி முந்திவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions