ஸ்ரீதேவியால் டென்சனில் ரம்யா கிருஷ்ணனை!

Bookmark and Share

ஸ்ரீதேவியால் டென்சனில் ரம்யா கிருஷ்ணனை!

சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் அவ்வப்போது ஏதாவது ஒரு சினிமாவில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்ணன். 

இந்த நிலையில், அவரே எதிர்பாரா வகையில் கிடைத்த வாய்ப்பு தான் பாகுபலி. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த வேடத்தில் நடிக்க ஸ்ரீதேவி உள்பட எத்தனையோ நடிகைகளை பரிசீலனை செய்தார் ராஜமவுலி. 

ஆனால் இறுதியில் ரம்யா கிருஷ்ணன் தான் ஓகே ஆனார். ஏற்கனவே பல படங்களில் அதிரடியான வேடங்களில் நடித்திருந்த அவர். இந்த படத்திலும் தனக்கே உரிய கம்பீரமான கேரக்டரை வெளிப்படுத்தி பேச வைத்தார்.

ஆனால், பாகுபலி-2 வில் திடீரென ஸ்ரீதேவி நடிக்கயிருப்பதாக பரவிய செய்தி ரம்யாகிருஷ்ணனை ரொம்ப டென்சன் செய்து விட்டதாம். காரணம், அவருக்கு வேண்டப்பட்டவர்கள் பலர் போன் செய்து, பாகுபலி-2 வில் உங்களுக்கு பதிலாக ஸ்ரீதேவி நடிக்கிறாராமே என்று கேட்டு அவருக்கே சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டார்களாம். 
அதையடுத்து, அவர் ராஜமவுலியை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரித்தாராம்.

அப்போதுதான், ஸ்ரீதேவி சான்ஸ் கேட்டார். இல்லை என்று சொன்னால் நன்றாக இருக்காதே என்பதற்காக, பார்க்கலாம் என்று சொன்னேன். அதை அவர் பேட்டிகளில் தெரிவித்ததால் இப்படியொரு செய்தியாகி விட்டது. ஆனால், பாகுபலி-2 விலும் நீங்கள் இருக்கிறீர்கள்.

இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடுத்தினாராம் ராஜமவுலி. அதையடுத்து தனது அபிமானிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர்களின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரம்யாகிருஷ்ணன்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions