புலி படத் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீதேவி புகார்

Bookmark and Share

புலி படத் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீதேவி புகார்

சமீபத்தில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான புலி படத்தில் தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஸ்ரீதேவி நடித்திருந்தார். இப்படத்தை சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி. செல்வகுமார் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு 5 கோடி சம்பளமாக தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி, ''புலி படம் வெளியாகி நீண்ட நாள் ஆகியும் எனக்கு பேசிய சம்பளத்தில் இன்னும் 50 லட்சத்தை புலி படத் தயாரிப்பாளர்கள் தரவில்லை.

பலமுறை கேட்டும் எந்தவிதமான பதிலும் வரவில்லை. எனக்கு சேர வேண்டிய பணத்தை புலி படத் தயாரிப்பாளர்களிடமிருந்து பெற்றுத்தாருங்கள்'' என்று புலி படத் தயாரிப்பாளர்கள் மீது மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீதேவி மும்பை நடிகர் சங்கத்தில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகாரை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு மும்பை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் புலி படத் தயாரிப்பாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions