ஸ்ரீதேவியின் புகாருக்கு விளக்கம் கொடுத்த புலி பட தயாரிப்பாளர்

Bookmark and Share

ஸ்ரீதேவியின் புகாருக்கு விளக்கம் கொடுத்த புலி பட தயாரிப்பாளர்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் நடித்த புலி படத்தில்தான் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் புலியை வெளியிட திட்டமிட்டதால் இந்திய அளவில் பரிட்சயமான ஒரு நடிகை படத்தில் இருந்தால் வியாபாரத்துக்கு பலமாக இருக்கும் என்றுதான் ஸ்ரீதேவியை நடிக்க வைத்தனர். 

அதோடு, அவர் புலி படத்தில் நடிப்பதற்காக 3 கோடி சம்பளம் கொடுத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் தனக்கு இன்னும் 50 லட்சம் சம்பள பாக்கி உள்ளதாகவும், அதை தர புலி தயாரிப்பாளர் மறுப்பதாகவும் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் அளித்தார் ஸ்ரீதேவி. அந்த புகார் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள், புலி தயாரிப்பாளரை அழைத்து அதுபற்றி விளக்கம் கேட்டனர்.

அதையடுத்து, புலி தயாரிப்பாளர் ஒரு விளக்க கடிதம் கொடுத்துள்ளார். அதில், ஸ்ரீதேவியை புலி படத்தில் நடிக்க வைக்க இரண்டு கோடியே 70 லட்சமும், டாக்ஸ் 30 லட்சமும் சேர்த்து 3 கோடி சம்பளம் கொடுத்தோம். 

ஆனால் படத்தை தமிழில் தயாரித்தாலும், மற்ற தெலுங்கு, இந்திக்கு டப்பிங் செய்து வெளியிடுவது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்போது எதுவும் சொல்லாத ஸ்ரீதேவி இப்போது இந்திக்கு டப் செய்திருப்பதால் தனக்கு கூடுதலான 50 லட்சம் வேண்டும் என்கிறார். ஆனால், படத்தின் டப்பிங் உரிமை அனைத்தும் தயாரிப்பாளருக்கே சொந்தமானது என்பதை ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம் என்று ஒரு விளக்கம் கொடுத்ததுள்ளனர்.

மேலும் 'புலி' படத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி மற்றும் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால் தயாரிப்பாளர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு கடைசியாக கொடுத்த செக்குகளை விஜய், ஸ்ருதிஹாசன் மற்றும் சுதீப் திரும்ப கொடுத்துவிட்டதாகவும், அதனால் அவர்களுக்கு பிரத்யேகமாக நன்றி கூறிக்கொள்வதாகவும் புலி தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions