அம்மா கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவி?

Bookmark and Share

அம்மா கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவி?

தமிழ் நடிகையான ஸ்ரீதேவி  தமிழ் திரையின் சூப்பர் ஸ்டார்கள் மட்டுமல்லாது தெலுங்கு திரையின் சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர். ஹிந்தி திரையிலும் கோலோச்சிய  நடிகை ஸ்ரீ தேவி திருமணத்திற்கு பின்னர் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவரது நடிப்பில் வெளிவந்த இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற ஹிந்தி படம் தெலுங்கு,தமிழ் உள்ளிட்ட பட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் ஹிந்தி படங்களில் மட்டுமல்லாது தென்னிந்திய படங்களிலும் நடிக்க நடிகை ஸ்ரீதேவி ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். தமிழ் திரை உலகில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் ராணியாக  நடித்து வரும் நடிகை ஸ்ரீதேவி தெலுங்கு திரையிலும் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

பாகுபாலி படத்திற்கு பின்னர் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் படத்தில் நடிகை ஸ்ரீதேவி  அவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெலுங்கு திரைவட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. 


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
ஸ்ரீ தேவிக்காக ஒன்று கூடிய திரையுலகம் - வைரலாகும் புகைப்படம்.!
ஸ்ரீதேவி நடக்காது என்று நினைத்த விஷயம் இறந்ததும் நடக்கப்போகிறதா?
துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions