ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு

Bookmark and Share

ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பொது இடங்களில் சுற்றக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தடா போட்டுள்ளாராம். 

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரை தங்களின் படத்தில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர் யார் படத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான கரண் ஜோஹார் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கரண் ஜோஹார் பல பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்தவர். இந்நிலையில் தான் அவர் ஜான்வி கபூரை பாலிவுட் படத்தில் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.

கரண் ஜான்வியை படத்தில் ஏதோ வித்தியாசமாக காட்ட உள்ளாராம். இந்நிலையில் படம் ரிலீஸாகும் வரை ஜான்வியை யார் கண்ணிலும் படக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளாராம் கரண்.

ஜான்வி தற்போது பார்ட்டிகள், விருது விழாக்கள் என பல இடங்களுக்கு சென்று வருகிறார். அழகு அழகு உடைகளில் அவர் உலா வருகிறார். இனி ஜான்வியை எங்கும் செல்லக் கூடாது என்று கரண் கூறியுள்ளாராம்.

கரண் சாய்ரத் படத்தை ரீமேக் செய்கிறார். அதில் தான் ஜான்வி நடிக்க உள்ளார். சாய்ரத் ரீமேக்கில் ஜான்வி நடிப்பதை அவரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதி செய்துள்ளார்.


Post your comment





Related News
டுவிட்டரில் தன்னை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்
பாகுபலி 2 உண்மையான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்
இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து
பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் படம் பார்க்கலாம்- கரண் ஜோஹரின் அதிரடி முடிவு
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மகிழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்
அந்த நடிகர் ஒரு பாக்கெட் காண்டம் வைத்துக்கொள்ள வேண்டும், பிரபல இயக்குனர் சர்ச்சை பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions