தொடரும் ஸ்ரீதேவி - மாதுரி தீட்சித் மோதல்!

Bookmark and Share

தொடரும் ஸ்ரீதேவி - மாதுரி தீட்சித் மோதல்!

ஹிந்தித் திரையுலகில் 80களின் இறுதியிலும் 90களிலும் இரண்டே இரண்டு ஹீரோயின்கள்தான் மிகவும் பாப்புலர் ஆக இருந்தார்கள்.

அவர்களில் ஒருவர் ஸ்ரீதேவி, மற்றொருவர் மாதுரி தீட்சித். தங்களது அழகாலும், நடனத்தாலும், ஆடை அலங்காரத்தாலும் ஆண்களை மட்டும் அதிகம் கவராமல், பெண்களையும் அதிகம் பொறாமைப்பட வைத்தார்கள்.

அவர்கள் இருவரும் நடித்த பல படங்கள் சாதனைகளுக்குரிய படங்களாக அமைந்தன. அப்போதே இருவருக்கும் இடையே மோதல், பனிப்போர், என செய்திகள் வெளிவந்தன. அவர்கள் இருவரும் சந்தித்தால் பேசிக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவரைப் பற்றி மற்றொருவர் எந்தக் கருத்தையும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. இத்தனைக்கும் ஸ்ரீதேவியின் கொழுந்தன் அனில் கபூருடன் சில வெற்றிப் படங்களில் நடித்தவர்தான் மாதுரி தீட்சித்.  

அவர்களிடையே அப்போதிருந்த போட்டி, பகை இப்போதும் தொடர்கிறது என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவி அங்கிருந்து கிளம்பும் சமயம், மாதுரி உள்ளே நுழைந்தாராம்.

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டார்கள் என அதை நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்கள். இந்த விவகாரம் பாலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
நடிகையாகவேண்டும் என்று நான் நினைத்ததில்லை : மாதுரி தீட்சித் பேட்டி
பிரபு தேவாவுடன் நடனம் ஆட பயப்படும் மாதுரி தீக்‌ஷிட்!
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த மாதுரி தீட்சித்துக்கு நோட்டீஸ்
விலை மாதுவாக நடிக்கும் வடிவேலு நாயகி மீனாக்ஷி தீட்ஷித்!
வடிவேலுவின் செண்டிமென்டை உடைத்த மீனாட்சி தீட்ஷித்!
பணம் பறிக்க நடிகை மாதுரி தீக்சித்துக்கு எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டல் விடுத்த ஹோட்டல் வெயிட்டர்
வடிவேலு நல்ல நல்ல டிப்ஸ் கொடுக்கிறார்: மீனாக்ஷி தீட்ஷித்..!
வடிவேலுடன் ஜோடிசேரும் விஜகாந்த் ஜோடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions