ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன புலி படக்குழுவினர்

Bookmark and Share

ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன புலி படக்குழுவினர்

1980- 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தில் நடித்திருக்கிறார். பேண்டஸி படமாக உருவாகியுள்ள இதில் ஸ்ரீதேவி மகாராணி வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்ரீதேவிக்கு இன்று பிறந்தநாள். இவர் தனது 52-வது பிறந்தநாளை இன்று சென்னையில் எளிமையாக கொண்டாடினார். அவருக்கு விஜய் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன், பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் ஸ்ரீதேவிக்கு, புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் மற்றும் இயக்குனர் சிம்புதேவன் ஆகியோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதி ஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நட்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட இருக்கின்றனர். செப்டம்பர் மாதம் படம் வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions