தயாரிப்பாளரானார் ஓவியர் ஸ்ரீதர்!

Bookmark and Share

தயாரிப்பாளரானார் ஓவியர் ஸ்ரீதர்!

பிரபல ஓவியர் ஸ்ரீதர். ஏராளமான படங்களை வரைந்து கண்காட்சிக்கு வைத்துள்ளார். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களை அச்சு அசலாக வரைந்து அவர்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

அதிலும் நடிகர் கமல்ஹாசனின் செல்லப்பிள்ளை ஸ்ரீதர் என்று சொல்லலாம். கமலின் எண்ணங்களை வண்ணங்களாக தீட்டியவர் ஸ்ரீதர். கமலின் இளமைக்காலம் தொட்டு இன்றைய காலம் வரை கமலை பல்வேறு வடிவங்களில் வரைந்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இதுநாள் வரை ஓவியராக இருந்த ஸ்ரீதர், இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளார். முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். புதுமுகங்களோடு ரோபோ சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு இரவில் நடக்கும் கதையே படம் முழுக்க படமாக்க இருக்கிறார்கள். ஆதித்யா பிரகாஷ் என்பவர் இப்படத்தை இயக்க இருக்கிறார். இவர் ஒரு கல்லூரி மாணவர். சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.

முதன்முறையாக கல்லூரி மாணவர் ஒருவர் படத்தை இயக்க இருக்கிறார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும் ஸ்ரீதர் வெளியிட இருக்கிறார். 


Post your comment





Related News
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
இயக்குனராக அவதாரம் எடுத்த டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்!
நடன இயக்குனர் ஸ்ரீதர் கதாநாயகனாக நடிக்கும் போக்கிரி மன்னன்
டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் செருப்பு நடனம்!
காதலிக்க நேரமில்லை திரைக்காவியம்: பொன்விழா கொண்டாட்டம்
ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் புதுக்கோட்டை தேர்தலில் போட்டி : ரஜினி அதிருப்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions