இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்ரீதிவ்யா!

Bookmark and Share

இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்ரீதிவ்யா!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. தற்போது அவர் கைவசம் காஷ்மோரா, அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் ஆகிய படங்கள் உள்ளன. 

இதுதவிர ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இதுவரை நடித்துள்ள படங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஹீரோக்களை காதலிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார் ஸ்ரீதிவ்யா. இப்படி ரொமான்ஸ் பார்பாமென்ஸே அவர் அதிகமாக கொடுத்திருப்பதால் இளவட்ட ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்கிறார்.

ஆனால் ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து டூயட் பாடிக்கொண்டிருக்க ஆசைப்படவில்லையாம். அதனால் தன்னிடம் கதை சொல்லும் டைரக்டர்களிடம், தமிழ், தெலுங்கு என நிறைய படங்களில் காதல் கதைகளாக நடித்துவிட்டேன்.

அதனால் இனிமேல் என்னை கதைக்களத்திற்குள்ளும் கொண்டு வாருங்கள். மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு அதிகமாக உள்ளது என்கிறாராம். மேலும், நான் 3 வயதில் இருந்தே நடித்து வருகிறேன்.

அதனால் எந்தமாதிரியான வேடம் என்றாலும் அதில் சிறப்பாக நடித்து விடக்கூடிய நடிப்பாற்றல் என்னிடம் உள்ளது என்று சொல்லி, தன்னை வெகுவாக கவர்ந்த சில கதாபாத்திரங்களையும் டைரக்டர்கள் முன்பு எடுத்து வைக்கிறாராம்.

ஸ்ரீதிவ்யாவின் இந்த ஆர்வம் சில டைரக்டர்களுக்கு அவரை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

 


Post your comment





Related News
விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்? உண்மையை கூறிய ஸ்ரீதிவ்யா
மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா
காதலும் நம்ம ஹீரோயின்களும்!
பெங்களூர் நாட்கள் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது!
ஸ்ரீதிவ்யாவை பீல் பண்ண வைத்த படங்கள்!
ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியான கயல் ஆனந்தி!
நவீன கேமராவில் கார்த்தி பட ஷூட்டிங்
காக்கி சட்டையை அட்டாக் செய்த உலக கோப்பை கிரிக்கெட்!
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ
அது நான் இல்லீங்க.. பேரை தப்பா எழுதிடாதீங்க! -ஸ்ரீதிவ்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions