ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியான கயல் ஆனந்தி!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவுக்கு போட்டியான கயல் ஆனந்தி!

சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திறகு பிறகு பேசப்படும் நடிகையானவர் ஸ்ரீதிவ்யா. ஆனால் அதன்பிறகு அதே சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்து வந்த காக்கி சட்டை படமும் ஹிட்டானால் ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட் எகிறி விடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அளவுக்கு வெற்றி பெறவிலலை. அதனால் அதோடு ஸ்ரீதிவ்யாவின் மார்க்கெட்டும் சரிந்தது. இருப்பினும் அடுத்தடுத்து சில படங்களில் கமிட்டாகிவிட தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் ஸ்ரீதிவ்யா.

அப்படி அவர் தீவிரம் காட்டிவந்தபோது, கயல் படத்திற்கு பிறகு புதிய படங்களை மின்னல் வேகத்தில் கைப்பற்றி வந்த ஆனந்தி, ஏற்கனவே வெற்றிமாறனின் விசாரணை படத்தில் கமிட்டானார். அதன்பிறகு, அதர்வா நடிக்கயிருந்த சண்டிவீரன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கயிருந்த த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா ஆகிய படங்களிலும் அடுத்தடுத்து கமிட்டானார் ஆனந்தி.

ஆனால், இந்த படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாதான் திரைக்குப்பின்னால் தீவிர முயற்சியில் இருந்து வந்தாராம். அந்த நேரம்பார்த்து குறைவான சம்பளத்தில் நடிக்க கயல் ஆனந்தி ஓகே சொன்னதால், அந்தவாய்ப்புகள் அவரிடத்தில் எளிதில் திரும்பி விட்டதாம். ஆக, ஸ்ரீதிவ்யாவுக்கு செல்ல இருந்த இரண்டு படங்களை கைப்பற்றி அவரை பின்னால் தள்ளியிருக்கிறார் ஆனந்தி.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions