ஸ்ரீதிவ்யாவை பீல் பண்ண வைத்த படங்கள்!

Bookmark and Share

ஸ்ரீதிவ்யாவை பீல் பண்ண வைத்த படங்கள்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை அடுத்து காக்கி சட்டையிலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா. இந்த படங்களில் அவரது நடிப்பு பேசும்படியாக அமைந்தது. அதோடு, ஜீவா, வெள்ளக்கார துரை போன்ற படங்களிலும் சிறப்பாகவே நடித்திருந்தார் அவர்.

ஆனால், இந்த படங்களைக் காட்டிலும், அதர்வாவுடன் நடித்த ஈட்டி, ஜி.வி.பிரகாசுடன் நடித்த பென்சில் ஆகிய படங்களுக்காக ரொம்பவே மெனக்கெட்டாராம் ஸ்ரீதிவ்யா. காரணம், இந்த படங்களில் அவரது கேரக்டருக்கும் கதையில் கூடுதல் பங்கு இருந்ததாம். 

அதனால் டைரக்டர்கள் சொல்லாமலேயே தானே ஹோம் ஒர்க் செய்து வந்து இந்த படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் கூடுதல் ஆர்வம் காட்டி நடித்த அந்த இரண்டு படங்களுமே எப்போதோ படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயார் நிலையில் இருந்தபோதும், இன்னும் திரைக்கு வராதது அவருக்கு பெரும் வருத்தத்தை அளித்துள்ளதாம்.

இதில் பென்சில் படம் வெளிவருவது கடினம் என்று ஜி.வி.பிரகாஷ்தரப்பிலேயே கூறப்பட்டு வரும் நிலையில், அதர்வா தடகள வீரராக நடித்துள்ள ஈட்டி படம் சண்டிவீரனுக்குப் பிறகு வெளியாக வாய்ப்பிருக்கிறது என்பது மட்டும் ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது ஆறுதலை கொடுத்துள்ளதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions