பேய் படத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது: ஸ்ரீகாந்த் பேட்டி

Bookmark and Share

பேய் படத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது: ஸ்ரீகாந்த் பேட்டி

திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் ‘சவுகார் பேட்டை’ என்ற பேய் படத்தில் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீகாந்த் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘எனது நடிப்பில் வித்தியாசம் வேண்டும் என்பதற்காகத்தான் பேய் படமான ‘சவுகார் பேட்டையில் நடித்தேன். இது பேய் படம் என்றாலும் அதிரடி, நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து ஜனரஞ்சகமான விஷயங்களும் உண்டு. யதார்த்தம் வேண்டும் என்பதற்காக மயானங்களில் படப்பிடிப்பை நடத்தினர்.

ஒரு பக்கம் பிணம் எரிந்து கொண்டு இருக்கும் இன்னொரு பக்கம் படப்பிடிப்பு நடக்கும். இது கஷ்டமான சவாலான அனுபவமாக இருந்தது. இதில் முதல் தடவையாக இரட்டை வேடத்தில் நடித்தேன். சென்னை இளைஞனாகவும் மந்திரவாதியாகவும் இரண்டு வேடங்களும் மாறுபட்டவை.

ஒருமணி நேரம் ‘மேக்கப்’ போட்டு நடித்தேன். எனக்கு ஜோடியாக வந்த ராய்லட்சுமி இதற்கு முன்பு பேய் படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். சண்டைக்காட்சிகளில் அவர் ‘டூப்’ போடாமல் நடித்தார்.

அப்போது அவருக்கு அடிகூட பட்டது. அதை பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தார். அவர் அர்ப்பணிப்புள்ள நடிகை. படப்பிடிப்பில் ராய்லட்சுமி பேய்க்கதைகள் சொல்லி உதவி இயக்குனர்களை பயமுறுத்தினார். 45 நாட்களில் டைரக்டர் வடிவுடையான் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்.

எனக்கு பேய் பயம் உண்டு. சிறு வயதில் இருந்தே இருட்டைப் பார்த்து பயப்படுவேன். எட்டாவது வகுப்பு படிப்பது வரை இந்த பயம் இருந்தது. அதன்பிறகு தைரியமான ஆளாக மாற திகில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். என்னதான் தைரியமான ஆளாக காட்டிக்கொண்டாலும் மனதின் ஒரு மூலையில் பேய் பயம் இருக்கத்தான் செய்கிறது’’.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
விஷாலை வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீகாந்த்- நண்பர்களுக்குள் விரிசல்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கோபிநாத் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!
நான் போராடிய காலத்தில் எனக்கு உதவியவர் விஜய் – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்!
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்திற்கு மேக்கப் போட்ட அழகிய பேய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions