பாடல் காட்சியில் பேயாக வந்து மிரட்டும் ஸ்ரீகாந்த்!

Bookmark and Share

பாடல் காட்சியில் பேயாக வந்து மிரட்டும் ஸ்ரீகாந்த்!

பொம்பளை பேய்களே சினிமாவை நீண்டகாலமாக ஆக்ரமித்து வந்த காலகட்டம் மாறி சமீபகாலமாய் ஆம்பளை பேய்களும் மிரட்டத் தொடங்கி விட்டன. காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்த அந்த ஆட்டம் இப்போது ஆண்கள் மத்தியிலும் சூடு பிடித்துள்ளது.

அதனால் இறந்து போன ஆண் பேய்கள் ஆண்களின் உடம்பில் புகுந்து பழிவாங்குவது ஆரம்பமாகியிருக்கிறது. அந்த வகையில், செளகார்பேட்டை படத்தில் ஸ்ரீகாந்து மிரட்டலான பேயாக நடித்திருக்கிறார்.

ரோஜாக்கூட்டம் நாயகனான ஸ்ரீகாந்த் இதற்கு முன்பு டீசன்டான வேடங்களிலேயே அதிகமாக நடித்து வந்தார். ஆனால் அது அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் காலத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு இந்த படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீகாந்த்.

அந்த வகையில், ஒரு பாடலில் பேயாக தோன்றி அச்சுறுத்தும் ஸ்ரீகாந்த், தான் பயமுறுத்தும் நபர்கள் குலை நடுங்க வேண்டும என்பதற்காக மிரட்டலான ஒரு பாடலுடன் தோன்றுவாராம்.

அந்த காட்சியை படமாக்கியபோது ஸ்ரீகாந்தின் நடிப்பைப்பார்த்து வேடிக்கை பார்த்த யூனிட்டைச்சேர்ந்தவர்கள்கூட சிலர் பயந்து போனார்களாம். அந்த அளவுக்கு கண்களை உருட்டி, நாக்கை கடித்துக்கொண்டு செம ஆக்டு கொடுத்திருக்கிறாராம் அவர்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
விஷாலை வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீகாந்த்- நண்பர்களுக்குள் விரிசல்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கோபிநாத் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!
நான் போராடிய காலத்தில் எனக்கு உதவியவர் விஜய் – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்!
பேய் படத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது: ஸ்ரீகாந்த் பேட்டி
தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions