அனிருத்தை பாட வைத்த ஸ்ரீகாந்த்தேவா!

Bookmark and Share

அனிருத்தை பாட வைத்த ஸ்ரீகாந்த்தேவா!

தொடர்ந்து ஹிட் பாடல்களாக கொடுத்து வரும் அனிருத், விஜய்யின் கத்தி படத்திற்கு இசையமைத்த பிறகு இப்போது அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றிருக்கிறார்.

அந்தவகையில், குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளர் அந்தஸ்தை பெற்றிருக்கிறார் அனிருத். அதோடு, பின்னணி பாடுவதிலும் அவர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

குறிப்பாக, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஐ படத்தில் அவர் பாடிய மெர்சலாயிட்டேன் என்ற பாடல் மெகா ஹிட்டானது. அதனால் இப்போது டி.இமானும் ரோமியோ ஜூலியட் படத்தில் அவரை டண்டனக்கா என்ற பாடலை பாட வைத்திருக்கிறார்.

இந்த பாடலும் படம் திரைக்கு வருவதற்கு முன்பே ஹிட்டாகியிருக்கிறது. இதற்கு டியூன் காரணம் என்றாலும், அனிருத் பாடியதால்தான் பெரிய அளவில் ரீச்சாகியிருக்கிறது என்று கருதுகிறார்கள்.

அதனால் தற்போது ஸ்ரீகாந்த் தேவாவும் தான் இசையமைத்துள்ள பாலக்காட்டு மாதவன் என்ற படத்துக்காக ஒரு பாடலை கடைசி நேரத்தில் அனிருத்தை அழைத்து பாட வைத்திருப்பவர், பப்ளிசிட்டி போஸ்டரில் அனிருத்துக்கு முதலிடம் கொடுத்து தான் ஓரத்தில் நிற்கிறார் ஸ்ரீகாந்த்தேவா.

அதோடு, சமீபகாலமாக ஹிட் பாடல்களை கொடுக்க முடியாமல் திணறி வரும் அவர், அனிருத் பாடிய பாடல் தனக்கு ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கிறாராம்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
மாமியாராக மாறிய தேவயானி
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
அரசியல் தலைவர்கள் வரிசையில் பசும்பொன் தேவரின் வாழ்க்கையும் படமாகிறது
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions