தன் பெயரை மாற்றியமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

Bookmark and Share

தன் பெயரை மாற்றியமைத்த  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

‘டபுள்ஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக ஸ்ரீகாந்த் அறிமுகமானார்.

பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தார். ஆரம்பத்தில் இவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வெற்றியடைந்தாலும், சரியான படங்களை தேர்வு செய்யாமல் வருகின்ற படங்களை எல்லாம் ஒப்புக்கொண்டதால் இவருடைய பாடல்கள் வரிசையாக தோல்வியை சந்திக்க ஆரம்பித்தன. ஒருகட்டத்தில், இவருக்கு சினிமாவில் வாய்ப்பில்லாமலே போனது. 

இந்நிலையில், சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற இசை ஆல்பத்தில் பாடி, நடித்தார். இதைத் தொடர்ந்து தனக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தவருக்கு, தற்போது ஜீவா-நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘திருநாள்’ படத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக இந்த படத்தில் தனது பெயரை ஸ்ரீ என்று மாற்றி வைத்துள்ளார். இந்த பெயர் மாற்றம் தனக்கு தமிழ் சினிமாவில் மீண்டும் பெரிய இடத்தை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..!
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
சைக்கோ ஒருவரால் பிரபல நடிகருக்கு நடந்த விபரீதம் - அதிர்ச்சியில் உறைந்த நடிகர்.!
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
விஷாலை வார்த்தைகளால் தாக்கிய ஸ்ரீகாந்த்- நண்பர்களுக்குள் விரிசல்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், கோபிநாத் தொடங்கி வைத்த மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம்!
நான் போராடிய காலத்தில் எனக்கு உதவியவர் விஜய் – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்!
பேய் படத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது: ஸ்ரீகாந்த் பேட்டி
ஸ்ரீகாந்திற்கு மேக்கப் போட்ட அழகிய பேய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions