பள்ளி மாணவ மாணவிகளாக ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

Bookmark and Share

பள்ளி மாணவ மாணவிகளாக ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி

எதையாவது செய்து சினிமாவுக்கு விளம்பரம் தேடிக் கொள்வதைப்போல ஏதாவது வித்தியாசமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் நடிகர், நடிகைகள்.

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா பள்ளி மாணவனாக நடித்தார். தனுஷ், ஸ்ருதி ஹாசன் 3 படத்தில் பள்ளி மாணவர்களாக நடித்தார்கள். ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா பென்சில் படத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது சவுகார் பேட்டை படத்தில் ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் பள்ளி மாணவ மாணவிகளாக நடிக்க இருக்கிறார்கள். பேய் படமான சவுகார் பேட்டையில் ஒரே ஏரியாவில் பிறந்து வளர்பவர்களாக ஸ்ரீகாந்தும், ராய் லட்சுமியும் நடிக்கிறார்கள்.

அவர்களின் பிளாஷ் பேக் கதையில் இருவரும் பள்ளி மாணவ மாணவிகளாக நடிக்கிறார்கள். இந்த காட்சிகள் படத்தில் 10 நிமிடம் இடம்பெறுகிறது. 30 வயதை கடந்த ராய் லட்சுமியும், 40 வயதை கடந்த ஸ்ரீகாந்தும் பள்ளி மாணவர்களாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எழுந்ததால், இதற்கென தனியாக போட்டோ ஷூட் நடத்திப் பார்த்து பலரிடம் காட்டி ஒப்புதல் பெற்றதும்தான் அந்த காட்சிகளை படத்திற்காக எடுக்க முடிவு செய்தார்களாம்.

ஒருவேளை அது யாருக்கும் பிடிக்காவிட்டால் கல்லூரி மாணவர்களாக கதையை மாற்றுவதாக இருந்தார்களாம். ஆனால் இயக்குனர் வடிவுடையானுக்கு படத்தை பார்த்ததும் திருப்தி வந்ததால் பள்ளி மாணவ மாணவிகளாகவே நடிக்க வைக்கிறாராம்.

இதற்காக சவுகார் பேட்டை பள்ளி ஒன்றில் மே மாத இறுதியில் இந்த காட்சிகளை எடுக்க இருக்கிறார்கள். இதற்காக ராய் லட்சுமி உடல் எடையை கணிசமாக குறைக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி குறும்பட இயக்குனருடன் நயன்தாராவின் அடுத்த படம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions