ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு

Bookmark and Share

ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு

மிர்ச்சி எனும் தெலுங்கு படத்தின் வாயிலாக வெற்றிப் பட இயக்குநராக அறியப்படும் டோலிவுட் இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடித்துள்ளார்.

அவருடன் முதன்முறையாக நடிகை ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஸ்ரீமந்துடு படத்தை வரும் ஜூலை 31 ஆம் தேதி தணிக்கைக் குழுவினருக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு  சான்றிதழ் வழங்குவார்கள் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர்  தேவி ஸ்ரீ  பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?
25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!
ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு
தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions