ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்

Bookmark and Share

ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்

டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார்.

ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

ஆனால் இதன் உண்மை காரணம் தற்போது தெரியவந்துள்ளது. டோலிவுட்டில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வரும் பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்து மூன்று நான்கு வாரங்கள் வரை எந்த படமும் அதன் வசூலை பாதிக்கக் கூடாது என்பதற்காக மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு பட வெளியீட்டை ஆகஸ்ட் 7 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்.

இதனை இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். இசையமைபாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இப்படத்தை நடிகர் மகேஷ்பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.


Post your comment





Related News
ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?
25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!
ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு
ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு
தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions