இணையத்தைக் கலக்கிய ஸ்ரீமந்துடு பஸ்ட் லுக் போஸ்டர்

Bookmark and Share

இணையத்தைக் கலக்கிய ஸ்ரீமந்துடு பஸ்ட் லுக் போஸ்டர்

டோலிவுடின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார்.

இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் டிரைலர், மகேஷ் பாபுவின் தந்தையும் மூத்த நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த தினமான மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக் குழுவினர்  அறிவித்திருந்தனர்.

ஆனால் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஸ்ரீமந்துடு படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் நேற்று டுவிட்டரில் வெளியிட்டனர். மிகவும் ஸ்டைலாக சைக்கிள் ஓட்டிவரும் மகேஷ் பாபுவின் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இணையத்தில் தீயாக பரவ துவங்கிய ஸ்ரீமந்துடு பஸ்ட் லுக் போஸ்டரை மகேஷ் பாபு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மைத்திரி மூவிஸ் பட நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றது.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions