ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீமந்துடு`

Bookmark and Share

ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ரீமந்துடு`

டோலிவுட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்ரீமந்துடு படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  மகேஷ் பாபுவின் தந்தையும் டோலிவுட்டின் மூத்த நடிகருமான கிருஷ்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்டு ஒரு நாட்களுக்குள் ஸ்ரீமந்துடு பட டீசரை இது ஏழு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். மேலும் டீசரில் மகேஷ் பாபு பேசும் வசனங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

இயக்குநர் கோரடலா சிவா இயக்கம் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கின்றார். டீசருக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஆதரவிற்கு இயக்குநர் சிவா நன்றி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தை நடிகர் மகேஷ்பாபு மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

 

 

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions