சமுதாயநல கருத்துள்ள படமாக வெளிவரும் ஸ்ரீமந்துடு

Bookmark and Share

சமுதாயநல கருத்துள்ள படமாக வெளிவரும் ஸ்ரீமந்துடு

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு, மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்து வரும்  ஸ்ரீமந்துடு படத்தை இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார். தென்னிந்திய நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படம் சமுதாயத்திற்கு தேவையான கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சி அடையாத கிராமங்களை தத்தெடுக்க வேண்டும், நாட்டிற்கு சேவை செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பன போன்ற சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் இப்படத்தின் வாயிலாக வலியுறுத்தப்படுள்ளதாக  ஸ்ரீமந்துடு படத்தின் ஒளிப்பதிவாளர் மதி தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஜூன் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேலைகளில் படக்குழுவினர் தற்போது மும்முரமாக  ஈடுபட்டு  வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions