இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!

Bookmark and Share

இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!

பிரின்சஸ் மகேஷ் பாபு தயாரித்து நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார். நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கும் இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்று திருட்டு தனமாக இணையத்தில் வெளியானது என தகவல்கள் பரவியது.

ஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆன மைத்ரி மூவீஸ் நிறுவனர் டுவிட்டரில் ஸ்ரீமந்துடு பட பாடல் இணையத்தில் வெளியானதாக கூறப்படும் தகவல் வெறும் வதந்தியே அது உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.  இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை  ஜூலை 18 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பெரும்தொகை கொடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சி ஒன்று ஸ்ரீமந்துடு படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றி உள்ளது.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions