ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு

Bookmark and Share

ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு

பிரின்சஸ் மகேஷ் பாபு நடிப்பில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிவரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கி வருகின்றார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார். ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது இப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி மகேஷ்பாபுவின் பிறந்தநாள் என்பதால் ஸ்ரீமந்துடு பட வெளியீட்டுடன் பிறந்தநாளைக் கொண்டாட ரசிகர்கள்  திட்டமிட்டு வருகின்றனர். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

இப்படத்தின் பாடல்கள் ஜூலை 18 ஆம் தேதி வெளிவரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட  படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகின்றது. ஜூன் 27 ஆம்  தேதியுடன் இப்படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இவற்றை நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீமந்துடு படக்குழுவினர் அறிவித்தனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions