ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்

Bookmark and Share

ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீமந்துடு படத்தின் ஆடியோ டீசர்

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீமந்துடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை (ஜூலை 18) ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது.

மிர்ச்சி எனும் வெற்றி படம் கொடுத்த இயக்குநர் கோரடலா சிவா இயக்கும் இப்படத்தில் முதன் முறையாக நடிகை ஸ்ருதிஹாசன் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த டீசர் நேற்று வெளியானது.

10 விநாடிகள் ஓடும் இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை இந்த டீசரை 1,21,000க்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். டீசரில் ஸ்டைலாக நடந்து வரும் மகேஷ் பாபுவும் அதற்கேற்ற பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ஆடியோ டீசருக்கு கிடைத்த வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
ஸ்ரீமந்துடு ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கவுள்ளார் சல்மான் கான்?
25 நாட்களில் ரூ.156 கோடி அள்ளிய ஸ்ரீமந்துடு!
ஸ்ரீமந்துடு அமெரிக்காவில் வசூல் சாதனை
ஸ்ரீமந்துடு படத்தை அதிமகாக நம்பும் மகேஷ் பாபு
ஜூலை 31ல் தணிக்கைக்குச் செல்லும் ஸ்ரீமந்துடு
ஜூலை 18ல் ஸ்ரீமந்துடு பாடல்கள் வெளியீட்டு விழா!
ஸ்ரீமந்துடு பட தாமத்திற்கான காரணம்
இணையத்தில் வெளியான ஸ்ரீமந்துடு பட பாடல்!
ஸ்ரீமந்துடு திரையிடும் தேதி அறிவிப்பு
தாமதமாகும் ஸ்ரீமந்துடு பட வெளியீடு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions