ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்

Bookmark and Share

ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்

திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் பணிபுரியும் பெண் என்ஜினீயரை மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மகன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.மலையாள திரையுலகின் பிரபல நடிகர் ஸ்ரீனிவாசன்.

இவர் ஏராளமான படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் பல படங்களை இயக்கவும் செய்துள்ளார்.இவரது மகன் தியான் ஸ்ரீனிவாசன். இவரும் சமீபத்தில் வெளியான `திரா' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கில் என்ஜினீயராக பணிபுரியும் அர்பிதா செபாஸ்டின் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் இதற்கு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து கண்ணூரில் உள்ள கிளப் ஹவுசில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாசனின் மனைவி விமலா, மணமகள் அர்பிதா செபாஸ்டியனின் தந்தை செபாஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் மலையாள முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் ஸ்ரீனிவாசனின் நிலத்தில் விளைந்த நெற்கதிர்கள் திருமண சடங்கில் பயன்படுத்தப்பட்டன. திருமண விருந்திற்கும் அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளே பயன்படுத்தப்பட்டன. 

 


Post your comment





Related News
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?
25 வருடங்கள் கழித்து மீண்டும் படம் தயாரிக்கும் முக்தா V.சீனிவாசன்
முதலமைச்சராகும் டாக்டர் சீனிவாசன்!
லத்திகா இரண்டாம் பாகம் எடுப்பேன்! - பவர் ஸ்டார் உறுதி
பவர் ஸ்டார் கணித்த வெற்றி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions