ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்: சிகா ஆண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Bookmark and Share

ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்: சிகா ஆண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு வருகிற ஜனவரி 10-ந் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான ஒரு அணியும், பெப்சி தலைவர் சிவா தலைமையிலான ஒரு அணியும், ஒளிப்பதிவாளர் கன்னியப்பன் தலைமையிலான ஒரு அணியும் என 3 அணிகள் போட்டியிடுகின்றன.

பி.சி.ஸ்ரீராம் அணியில் தலைவர் பதவிக்கு பி.சி.ஸ்ரீராமும், செயலாளர் பதவிக்கு கே.கண்ணன், பொருளாளர் பதவிக்கு ராம்நாத் ரெட்டி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த அணிக்கு நடுநிலை அணி பெயர் வைத்துள்ளனர். அதேநேரத்தில், கன்னியப்பன் தலைமையிலான அணிக்கு சிகா ஆண்டவர் அணி என்று பெயர் வைத்துள்ளனர்.

இதில் சிகா ஆண்டவர் அணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில், தலைவர் பதவிக்கு கே.வி.கன்னியப்பன் போட்டியிடுகிறார். ஒய்.என்.முரளி செயலாளர் பதவிக்கும், சி.எஸ்.ரவிபாபு பொருளாளர் பதவிக்கும் போட்டியிடப்போவதாக அறிவித்தனர்.

மேலும், துணைத்தலைவர், இணை பொதுச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுவர்களின் பெயர்களையும் அறிவித்தனர். இத்துடன் சிகா ஆண்டவர் அணியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

அதில், நேர்மையான நிர்வாகம், உறுப்பினர்களின் ஊதிய உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வது, காப்பீட்டு திட்டம், விபத்துக்கான இழப்பீடு, தொழில்நுட்ப அறிவு, சிகா ஆப், வேலைவாய்ப்பு, சிகா பயிற்சி நிறுவனம், ஒளிப்பதிவு கருவிகள் கண்காட்சி, சொந்தமாக கட்டிடம், மற்ற மாநில உறுப்பினர்களின் கூட்டம், நலநிதி உதவி, இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு, தமிழக அரசுடன் இணைந்த திட்டங்கள் ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. 


Post your comment





Related News
சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்
இசையமைப்பாளர் ஆனார் பாடகி அனுராதா ஸ்ரீராம்
பணத்திற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை: நாயகன் ஸ்ரீராம்
நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!
தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?
ஆபாச பாடல்களை பாட மறுக்கும் அனுராதா ஸ்ரீராம்!
நயன்தாராதான் வேண்டும் : அடம்பிடிக்கும் ஹீரோ...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions