பணத்திற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை: நாயகன் ஸ்ரீராம்

Bookmark and Share

பணத்திற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக்கு கிடைப்பதில்லை: நாயகன் ஸ்ரீராம்

'கருவறையில் இருந்து கல்லறை வரை பைசா தேவை'. இருந்தாலும், பைசாவால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பைசாவை வைத்துக்கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது,

மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியாது, கூட்டத்தை வாங்கலாம் நண்பர்களை வாங்க முடியாது. இப்படி பைசாவினால் ஏற்படும் நன்மைகளையும், தீமைகளையும் மக்களுக்கு உணர்த்த வருகிறது ஜூலை 1 ஆம் தேதி வெளியாகும் 'பைசா' திரைப்படம். 

விஜய்யின் 'தமிழன்' திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத், பைசா படத்தை இயக்கி இருக்கிறார். 'பசங்க' புகழ் ஸ்ரீராம், புதுமுகம் ஆரா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கான்பிடண்ட் பிலிம் கபே, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்.கே.ட்ரீம் வேர்ல்ட் 'பைசா' படத்தை தயாரித்திருக்கிறது.

'கோலி சோடா' படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்ற ஸ்ரீராம், இந்த 'பைசா' படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார்.

இப்படம் குறித்து ஸ்ரீராம் கூறும்போது, ‘பணமே வாழ்க்கையில்லை! பணம் இல்லாமலும் வாழ்க்கையில்லை! இது தான் எங்கள் 'பைசா' படத்தின் ஒரு வரிக்கதை.

உணர்ச்சிகளால் சூழப்பட்ட ஒரு தனி மனிதனுக்கு கிடைக்காத மரியாதை, வெறும் காகிதத்தால் ஆன பணத்திற்கு அதிகளவில் கிடைக்கிறது. அந்த அளவிற்கு 'பைசா' மனிதனின் அன்றாட வாழ்க்கையை ஆக்கிரமித்து வருகிறது. குப்பை பொறுக்கும் இளைஞனாக இந்த 'பைசா' படத்தில் நான் நடித்துள்ளேன். அவன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், அவனை கடந்து போகும் ஒரு அழகிய காதல், எதிர்பாராத திருப்பங்கள் என பல சுவாரசியங்களுடன் உருவாகி உள்ளது 'பைசா' திரைப்படம்" என்றார்.


Post your comment





Related News
சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்
இசையமைப்பாளர் ஆனார் பாடகி அனுராதா ஸ்ரீராம்
ஒளிப்பதிவாளர் சங்க தேர்தல்: சிகா ஆண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நர்ஸ் கெட்டப்பில் சிவகார்த்திகேயன்..!
தேர்தல் களத்தில் இறங்கும் பி.சி.ஸ்ரீராம்?
ஆபாச பாடல்களை பாட மறுக்கும் அனுராதா ஸ்ரீராம்!
நயன்தாராதான் வேண்டும் : அடம்பிடிக்கும் ஹீரோ...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions